அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை 01.04.2023 முதல் இந்த இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களின் மூலம் சமர்பிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை இணையதளம் மூலமாகவே தரவேற்றம் செய்யலாம். சரியான அதார் எண் வழங்காதது, இறப்பு, பிற வாரியங்களில் உறுப்பினராக இருத்தல், 60 வயதை அடைந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பதிவின் பலன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அது தொடர்பான விவரங்களை தங்கள் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில் கேட்டு தெரிந்து அக்குறைபாடுகளை சரி செய்து வழங்கி நலவாரிய பலன்களை தொடர்ந்து பெறக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்